புலிக்கால் முனிவரான வியாக்கிரபாதர் வந்து வழிபட்ட தலமாதலால் 'பெரும்புலியூர்' என்று பெயர் பெற்றது.
மூலவர் 'வியாக்கிரபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'சௌந்திர நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இக்கோயிலுக்கு மேற்கில் திருமழிசையாழ்வாரின் பெருமையை உலகினருக்கு அறிவித்த பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றிப் வணங்கியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|